/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலை.,க்கு சிறப்பு பஸ் மாணவர் அமைப்பு கோரிக்கை
/
பல்கலை.,க்கு சிறப்பு பஸ் மாணவர் அமைப்பு கோரிக்கை
ADDED : அக் 21, 2024 06:08 AM

புதுச்சேரி: பல்கலைக்கழகத்திற்கு அரசின் மூலம் 1 ரூபாய் சிறப்பு பஸ்சை இயக்கிட வேண்டுமென, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பினர் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், 'புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு தனியார் மூலம் நகரப் பகுதிக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா காலத்தின் போது பல்கலைக்கழகத்திற்கு இயக்கப்பட்டு வந்த பஸ்கள் நிறுத்தப்பட்டது. ஆனால், நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படவில்லை.
இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் போதிய நிதி இல்லாததால், பஸ்களை மீண்டும் இயக்க முடியாத சூழல் உள்ளதாக தெரியவந்தது. ஆகையால், புதுச்சேரி அரசு மூலம் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இயக்கப்பட்டு வரும் 1 ரூபாய் சிறப்பு பஸ்களை, பல்கலைக்கழக மாணவர்களுக்கு இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நமச்சிவாயம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி அதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், மாணவர் அமைப்பின் பொறுப்பாளர்கள் தீபன், அகில் சவுத்ரி, ஆர்த்தி, கிருத்திகா, கோகிலா, அஜித், விமலா தேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

