/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
/
இஷ்ரம் வலைதளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்
ADDED : ஏப் 11, 2025 04:11 AM
புதுச்சேரி: அமைப்புச் சாரா தொழிலாளர்கள் இஷ்ரம் வலை தளத்தில் பதிவு தொழிலாளர் துறை சிறப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், அமைப்புச்சாரா தொழிலாளர்களை கண்டறிந்து, பல்வேறு நலத்திட்டங்களை வழங்க, தளத் தொழிலாளர்கள், நிகழ்ச்சி தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் 'இஷ்ரம்' வலைதளத்தில் பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளது.
இத்திட்டத்தில் பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு 5 லட்சம் பிரதான் மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம், விபத்தில் இறந்தால் 2 லட்சம் பிரதான் மந்திரியின் காப்பீடு, 1 லட்சம் நிரந்திர உடல் ஊனமுற்றோர்கான காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் செயல் படுத்தப்பட உள்ளது.
இதன்படி, புதுச்சேரியில் பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இஷ்ரம் 'register.eshram.gov.in' வலை தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக, அரசின் தொழிலாளர் துறை சிறப்பு முகாம்களை அமைத்து இஷ்ரம் பதிவை இலவசமாக செய்து வருகிறது.
அதன்படி, அனைத்து பொது சேவை மையங்கள், அமைப்புச்சாரா தொழிலாளர் நலச் சங்கம், கட்டடம் மற்றும் இதர கட்டுமான தொழிலாளர் நல வாரியம்,மேட்டுப்பாளையம், வம்பாகீரப்பாளையம், வில்லியனுார், பாகூர், நெட்டப்பாக்கம் அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள், காரைக்கால் தொழிலாளர் துறை, காமராஜர் வாளாகம், மாகே உதவி தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம், ஏனாம் உதவி தொழிலாளர் ஆய்வாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் வரும் 17ம் தேதி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரைசிறப்பு முகாம் நடக்கிறது.
இத்திட்டத்தில் 16 முதல் 59 வயது உடையவர்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுடன், இலவசமாக பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

