திருக்கனுார் கடைவீதியில் சிறப்பு துப்புரவு முகாம்
திருக்கனுார் கடைவீதியில் சிறப்பு துப்புரவு முகாம்
ADDED : மே 01, 2026 03:23 AM

புதுச்சேரி: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மூலம் திருக்கனுார் கடை வீதியில் சிறப்பு துப்புரவு முகாமை ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார்.
உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆதார்ஷ் உத்தரவின்பேரில், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளில் கொம்யூன் துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் சிறப்பு துப்புரவு முகாம் நடத்தி குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருக்கனுார் கடைவீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு துப்புரவு முகாம் நேற்று நடந்தது.
முகாமை கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்து, குப்பைகளை விரைவாக அகற்ற உழியர்களுக்கு உத்தரவிட்டார்.
பொது மக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றும் குப்பைகளை மக்கும், மக்காத என தரம் பிரித்து வழங்க அறிவுறுத்தினார்.
கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனன் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.
