தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாந்திகிரி மருத்துவமனையில் நாளை சிறப்பு ஆலோசனை முகாம்

சாந்திகிரி மருத்துவமனையில் நாளை சிறப்பு ஆலோசனை முகாம்

சாந்திகிரி மருத்துவமனையில் நாளை சிறப்பு ஆலோசனை முகாம்


ADDED : ஏப் 18, 2025 08:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 18, 2025 08:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி சாந்திகிரி ஆயுர்வேதா, சித்தா மருத்துவமனையில், நாளை (19ம் தேதி) பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாந்திகிரி ஆஸ்ரமத்தின் புதுச்சேரி கிளை, எஸ்.வி., பட்டேல் சாலை பழைய சாராய ஆலை அருகில் இயங்கி வந்தது. தற்போது, எண் 34, அரபிந்தோ வீதி, (மிஷன் வீதி சந்திப்பு) புதுச்சேரி என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு, நாளை (19ம் தேதி) பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது.

காலை 10:00 மணி முதல் இரவு 7:00 வரை நடக்கும் முகாமில் கழுத்து , இடுப்பு, மூட்டுவலி, கீழ் வாதம், எலும்பு தேய்மானம், நீரிழிவு சிக்கல்கள், சோரியாசிஸ், தோல் நோய்கள், மாதவிடாய் பிரச்னைகள், மன அழுத்தம் மற்றும் துாக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு கேரளா பாரம்பரிய முறைப்படி ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கேரளாவில் புகழ்பெற்ற சிறப்பு ஆயுர்வேத டாக்டர் அதுல்யா சிகிச்சை அளிக்க உள்ளார். பயன்பெற 0413 4209898, 2225898, 9585535898 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us