தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சரநாராயண பெருமாளுக்கு இன்று சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு இன்று சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு இன்று சிறப்பு அலங்காரம்


ADDED : டிச 30, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 30, 2024 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு மூலவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று 30ம் தேதி மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் ஆண்டாள் ரங்கமன்னார் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

காலை 5:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், 6:00 மணிக்கு தனுர்மாத பூஜை, 7:30 மணிக்கு நித்யபடி பூஜை நடக்கிறது.

காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.

விழாவையொட்டி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் இருந்து சூடிக்கொடுத்த மாலையும், கிளியும் சாற்றப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us