தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு நாளை சிறப்பு அலங்காரம்


ADDED : ஜன 28, 2025 05:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 05:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (29ம் தேதி) தை அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:15க்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள்புறப்பாடாகி திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

மூலவர் பெருமாளுக்கு பல வகையான ஒரு டன் பழங்களால் அலங்காரம் செய்து, வேணுகோபாலன் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பகல் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us