ராஜேந்திராஸ் ஜவுளி கடையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
ராஜேந்திராஸ் ஜவுளி கடையில் சிறப்பு தள்ளுபடி விற்பனை
ADDED : மார் 03, 2024 04:45 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராஜேந்திராஸ் ஜவுளி கடையில் மார்ச் மாத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.
புதுச்சேரி, நேரு வீதியில் ஜவுளி விற்பனையில் வெள்ளிவிழா கண்ட ராஜேந்திராஸ் ஜவுளிக்கடையில், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு தனித்தனியே ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு மார்ச் மாதத்தையொட்டி, சிறப்பு தள்ளுபடி விற்பனை கடந்த 1ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.
இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரன் கூறியதாவது;
எங்களது ஜவுளி கடையில் மார்ச் மாதம் முழுதும் ஜவுளி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 60 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. டோலா பட்டு சேலைகள், லினன் சேலைகள், சில்க் காட்டன் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசமாக வழங்குகிறோம். டீன் ஏஜ் பெண்களுக்கு குர்திஸ் ஆடை, லெகின்ஸ் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்.
ஆண்களுக்கான பார்மல் சர்ட், பேண்ட் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். லேகங்கா ஆடைகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பிரபல பிராண்ட் கம்பெனிகளான லுாயிஸ் பிலிப்பி, ஓட்டோ, ஜீரோ, பார்க் அவென்யூ, வென் பீல்ட் ஆகிய கம்பெனிகளின் ஜவுளிகளையும் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, குடும்பத்திற்கு தேவையான அனைத்து ஜவுளிகளையும் ஒரே இடத்தில் வாங்கி செல்லலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
