மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாம்
ADDED : ஆக 26, 2026 09:12 PM
புதுச்சேரி: புதுச்சேரி தொழிலாளர் துறை, வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் சத்யா சிறப்பு பள்ளி இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு வேலைவாய்ப்பு பதிவு முகாமை நடத்தின.
கருவடிக்குப்பம் சத்யா சிறப்பு பள்ளியில் நடந்த முகாமில், விஜயா சந்திரசேகரன் வரவேற்றார். துணைத் தொழிலாளர் ஆணையர் சந்திரகுமரன், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சத்யா சிறப்பு பள்ளி இயக்குநர் சித்ரா ஷா, மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு தனியார் துறைகளில் தற்போது உருவாகி வரும் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினர்.
துணைத் தொழிலாளர் ஆணையர் சந்திரகுமரன் பேசுகையில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு, அரசின் பல்வேறு தொழிற் பயிற்சி திட்டங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வேலைவாய்ப்பு வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.
முகாமில், பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற மற்றும் பல்வேறு பயிற்சிகளை முடித்த 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு தேவையான உயர்கல்வி, தொழில் தேர்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான கல்வி மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. முகாமில், 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளப்பட்டது. மேலும், 10வது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மேற்படிப்பு தொடர வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது.
