தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கிராம வங்கியில் வீட்டுக்கடன் சிறப்பு முகாம்

 புதுச்சேரி கிராம வங்கியில் வீட்டுக்கடன் சிறப்பு முகாம்

 புதுச்சேரி கிராம வங்கியில் வீட்டுக்கடன் சிறப்பு முகாம்


ADDED : ஜூன் 05, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கிராம வங்கியில் வீட்டுக்கடன் சிறப்பு முகாம் கடந்த 1ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 48 புதுச்சேரி கிராம வங்கி கிளைகளிலும், வீட்டுக்கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம் கடந்த 1ம் தேதி துவங்கி வரும் ஜூலை 15ம் தேதி வரை நடக்கிறது.

முகாமில் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதத் தவணை (இ.எம்.ஐ.) ரூ.675 முதல் துவங்குகிறது.

(வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.15 சதவீதம் முதல் ஆரம்பம் - வங்கி நிபந்தனைகளுக்கு உட்பட்டது). இந்த 45 நாட்கள் சிறப்பு முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பரிசீலனைக் கட்டணம் இல்லை.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள புதுச்சேரி கிராம வங்கிக் கிளை மற்றும் 0413 -222785 தொலைபேசி எண்ணைதொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us