/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே சிறப்பு முகாம் 250 மாணவர்களுக்கு பயிற்சி
/
கராத்தே சிறப்பு முகாம் 250 மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : செப் 26, 2024 03:11 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் ஒரு நாள் கராத்தே சிறப்பு பயிற்சி முகாம் வரும் 29ம் தேதி நடக்கின்றது.
புதுச்சேரி கோஜி காய் கராத்தே பயிற்சி பள்ளி நடத்தும் 54வது ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம், வரும் 29ம் தேதி செயின்ட் பேட்ரிக் பள்ளியில் நடக்க உள்ளது.
இப்பயிற்சி முகாமில் தனியார் பள்ளி, அரசு பள்ளி மற்றும் பிற கராத்தே பிரிவுகளை சார்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சியில் அடிப்படை செயல்முறை விளக்கம், கட்டா, ஷியாய் ஆகிய பிரிவின் தற்போதைய தொழில்நுட்பங்கள், விதிமுறைகள் பயிற்றுவிக்கப்பட உள்ளது.
மூத்த மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் பெல்ட், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. முகாமில் கராத்தே சர்வதேச நடுவர் ஜோதிமணி, சென்னை புதோகாய் கராத்தே பள்ளி தலைமை பயிற்சியாளர் கெபிராஜ் தலைமையில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர்.
புதுச்சேரியில் கராத்தே அறிமுகமான காலத்தில் முதன்முதலாக கராத்தே பயிற்சி முகாமை, குபேர் திருமண மண்டபத்தில், கடந்த 1982ல் சர்வதேச கராத்தே நடுவர் ஜோதிமணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.