ADDED : பிப் 03, 2026 04:47 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மலேசியாவில் தமிழும், தமிழர்களும் என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
கல்லுாரி தமிழ்த்துறையில் நடந்த நிகழ்ச்சியில், காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் கோச்சடை தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக, முத்தமிழ் பாவலர் மன்றம் (ஈப்போ, மலேசியா) தலைவர் ஆறுமுகம் கண்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குமுதா நன்றி கூறினார்.
