தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரை தொடர் துவக்கம்

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரை தொடர் துவக்கம்

 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரை தொடர் துவக்கம்


ADDED : மார் 19, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 04:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் முன்னணி அறிஞர்கள் மற்றும் பொது சிந்தனையாளர்கள் தொடர்புகொள்ளும் 'சிறப்பு விரிவுரைத் தொடர்' துவங்க விழா நடந்தது.

சிறப்பு விரிவுரை தொடரை விஞ்ஞானி விரந்தர் சிங் சவுஹான் துவக்கி வைத்து, தடுப்பூசிகளின் அறிவியல் அடிப்படைகள், அவற்றின்வளர்ச்சி வரலாறு மற்றும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்கள், இந்தியாவின் முதல் மறுசேர்க்கை மலேரியா தடுப்பூசி உருவாக்கம்,தடுப்பூசியின் தவறான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வு பற்றாக்குறை, பாலியோ நோயை ஒழித்த இந்தியாவின் சாதனையை எடுத்துரைத்தார்.

துணை வேந்தர் பிரகாஷ் பாபு, பல்கலைக்கழகத்தின் சாதனைகள் குறித்து பேசினார். பல்கலைக்கழகம் மற்றும் இணைகல்லுாரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஒழுங்கமைப்பு குழுத் தலைவர் ராஜ்நீஷ் புடானி, விரிவுரைத் தொடர் காலப்போக்கில் உலகின் முன்னணி விரிவுரைத் தொடர்களில்ஒன்றாக உருவெடுக்கும்' என்றார். நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு பல்கலைக்கழகம் அடைந்த கல்விசார் சாதனைகள், செயல்பாடுகள் மற்றும்வெளிச்சார்பு முயற்சிகளை பிரதிபலிக்கும் நினைவிதழ் வெளியிடப்பட்டது.

பல்கலைக்கழக வளர்ச்சியை வெளிப்படுத்தும் ஆவணப்படம்திரையிடப்பட்டது.

பேராசிரியர்கள் தரணிகரசு, நடராஜன் வாழ்த்தி பேசினர். ஏற்பாடுகளை வாழ்க்கை அறிவியல் பள்ளி டீன் ஜோசப் செல்வின், வினோத் ராஜேந்திரன்,ருக்மணி, ரிது தியாகி மற்றும் கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us