ஜான் மரிய வியான்னி ஆலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி
ஜான் மரிய வியான்னி ஆலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி
ADDED : ஏப் 23, 2026 07:01 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புனித ஜான் மரிய வியான்னி பங்கு ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடந்தது.
புதுச்சேரி ரெயின்போ நகர் புனித ஜான் மரிய வியான்னி பங்கு ஆலயத்தில் நேற்று பாதிரியார் கிரகோரி லுயிஸ் ஜோசப் 30ம் ஆண்டு குருப்பணியின் துவக்கவிழாவை முன்னிட்டு கூட்டு திருப்பலி நடந்தது.
திருப்பலி முடிவில் ஆலய வளாகத்தில் பாராட்டு விழாவும் நடந்தது. பாதிரியார் கிரகோரி லுயிஸ் ஜோசப்பிற்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டார். பின், அவர் அனைவருக்கும் சிறப்பு ஆசி வழங்கி இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
