sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறப்பு திருமஞ்சனம்

/

சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்


ADDED : ஆக 25, 2025 05:48 AM

Google News

ADDED : ஆக 25, 2025 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : மதிக்கிருஷ்ணாபுரம் பட்டாபிராமர் சுவாமி கோவில், புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

புதுச்சேரி - கடலுார் சாலை, மதிக்கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர், லட்சுமணன், சீதாபிராட்டி சமேத பட்டாபிராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ராமர் பிறந்த நட்சத்திரமான, புனர்பூசம் நட்சத்திரத்தையொட்டி, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

இதனையொட்டி, காலை 9:00 மணிக்கு, பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர, இளநீர் உள்ளிட்டவற்றால் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து, மகா தீபாராதனை காண்பிக்கபட்டு பக்தர்களுக்கு பிரசாத ம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணியளவில், உற்சவமூர்த்தி உள்புறப்பாடு நடந்தது. இரவு 8:00 மணிக்கு, சுவாமி சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சின்னசாமி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us