ADDED : டிச 03, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வில்லியனுார் விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வில்லியனுார் ஆரம்ப சுகாதா நிலைய மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமையில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமில்,சுகாதார ஆய்வாளர் மதிவதனன், சுகாதார உதவி ஆய்வாளர்அய்யனார், கிராமப்புற செவிலியர் மரிரோஸ்லின் ஆகியோர் மருத்துவ பரிசோதனை செய்து, மருந்துகள் வழங்கினார்.
பள்ளியின் துணை முதல்வர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.