ADDED : மார் 06, 2024 03:18 AM

புதுச்சேரி : மகளிர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி கோர்ட் வளாகத்தில், கண், பல், மற்றும் காது பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
புதுச்சேரி பார் அசோசியேஷன் மகளிர் வக்கீல்கள் சார்பில், புதுச்சேரி ஈவ்ஸ் ரோட்டரி சங்கம், ஜோதி கண் பராமரிப்பு மையம், சேஷாவின் ஸ்மைல் 32 கிளினிக் மற்றும் சிம்ஹா செவித்திறன் உதவி மையம் இணைந்து சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறப்பு விருந்தினராக தலைமை நீதிபதி சந்திரசேகர் கலந்து கொண்டு, சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். விழாவில் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.
சீனியர் வக்கீல் ரோஸ்லெட் ஜட்சன், டாக்டர் வனஜா வைத்தியநாதன், மஞ்சு பரத்ராஜ், டாக்டர் ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாம் ஏற்பாடுகளை, ஈவ்ஸ் ரோட்டரி சங்கத்தின் தலைவர் தேவிகா, செயலாளர் ேஹமாம்புஜம், பொருளாளர் ரேஸ்மி, திட்ட ஒருங்கிணைப்பாளர் வக்கீல் மரி அன்னா தயாவதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
