ADDED : செப் 15, 2025 01:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நெல்லித்தோப்பு சக்தி நகரில் தி.மு.க., சார்பில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை மாநில அமைப்பாளர் சிவா துவக்கி வைத்தார்.
தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடந்த முகாம் துவக்க விழாவிற்கு தொகுதி செயலாளர் நடராஜன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் வேலன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பாளர் சிவா முகாமை துவக்கி வைததார்.
முகாமில் பங்கேற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து, 58 வகையான மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், தலைமை செயற்குழு உறுப்பினர் லோகையான், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், வேலவன், வேலன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், தியாகராஜன், வடிவேல், மருத்துவர் அணி அமைப்பாளர் ஆனந்த் ஆரோக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.