ADDED : ஜூலை 04, 2026 03:16 AM

அ நிறம் | அளவு
வில்லியனுார்: ஊசுடு தொகுதியில் இரு கோவில்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி இந்து அறநிலையத்துறை சார்பில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பரிந்துரையின் பேரில் ஊசுடு தொகுதியை சேர்ந்த கூடப்பாக்கம் மாரியம்மன் தேவஸ்தானத்திற்கு சிறப்பு அதிகாரியாக நித்யலட்சுமியும், ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள சக்கரவிநாயகர் மற்றும் முத்தாலம்மன் தேவஸ்தானத்திற்கு சிறப்பு அதிகாரியாக ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமன ஆணையை, முதல்வர் ரங்கசாமி வழங்கினார். அப்போது, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் கிராம முக்கயஸ்தர்கள் உடனிருந்தனர்.
