/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

ADDED : செப் 22, 2024 01:58 AM

புதுச்சேரி: புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி, புதுச்சேரி, காந்தி வீதியில் உள்ள வரதராஜ பெருமாள், முத்தியால்பேட்டை தென்கலை சீனிவாச பெருமாள் கோவில், முதலியார்பேட்டை வரதராஜ பெருமாள் கோவில், பாரதி பூங்கா அருகே உள்ள பாலாஜி வெங்கடேச பெருமாள், வில்லியனுார் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன.
இக்கோவில்களில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
மேலும், திண்டிவனம் சாலையில் உள்ள பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், சிறப்பு பூஜை நடந்தது.
பல்வேறு பகுதியில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.