ADDED : ஆக 29, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: யோக மாயா லலிதாம்பிகை கோவிலில், 1ம் தேதி வராகி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.
குருமாம்பட்டு ஹவுசிங் போர்டு அருகில் யோக மாயா லலிதாம்பிகை கோவில் உள்ளது. ஒவ்வொரு பஞ்சமி தேய்பிறை நாளில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், வரும் 1ம் தேதி, வராகி அம்பாளுக்கு மாலை 6:00 மணிக்கு சிறப்பு யாகம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது.
