sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மொரட்டாண்டியில் நாளை சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

/

மொரட்டாண்டியில் நாளை சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

மொரட்டாண்டியில் நாளை சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை

மொரட்டாண்டியில் நாளை சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை


ADDED : மார் 05, 2026 05:03 AM

Google News

ADDED : மார் 05, 2026 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவக்கிரங்களில் முதன்மையான சனீஸ்வரர் நாளை காலை 8:24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் பெயர்கிறார். இந்த சனிப் பெயர்ச்சி பரகாரம் வேண்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் அமைந்துள்ள சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பூஜை இன்று 5ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வரருக்கு 1,008 லிட்டர் பாலாபிேஷகம், கலசாபிேஷகம், தீபாராதனை, மாலை 6:00 மணிக்கு முதல்கால யாக பூஜை நடக்கிறது.

நாளை 6ம் தேதி விடியற்காலை 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, சனிப் பெயர்ச்சி சிறப்பு ேஹாமம், பரிகார ேஹாமங்களை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடாகி, காலை 8:26 மணிக்கு கலசாபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு 80 அடி உயர மகா கும்பத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. அதற்காக அமைத்துள்ள கொப்பரையில் பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு நல்லெண்ணெய் ஊற்றி, அதில் தங்களுடைய முகத்தையும், விநாயகர் மற்றும் சனி பகவானின் திருமேனியையும் தரிசித்து, சனி தோஷத்திலிருந்து விடுபட இறைவனைப் பிரார்த்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேரடி அபிேஷகம் இந்த சிறப்பு பூஜையில், பக்தர்களே நேரடியாக நல்லெண்ணெய் அபிேஷகம் செய்ய சனீஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us