ADDED : செப் 17, 2026 07:44 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: யோகா மாயா லலிதாம்பிகை கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
புதுச்சேரி குருமாம்பட்டு இந்திரா நகரில் யோக மாயா கோவில் உள்ளது. இக்கோவிலில், பஞ்சமி தினத்தில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. வளர்பிறை பஞ்சமியொட்டி, கோவிலில் உள்ள வாராகி அம்மனுக்கு அபிேஷகம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனுக்கு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
