/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் நாளை சிறப்பு பூஜை
/
பாலாதிரிபுரசுந்தரி கோவிலில் நாளை சிறப்பு பூஜை
ADDED : பிப் 17, 2024 05:11 AM
புதுச்சேரி : சியாமளா நவராத்திரி பூர்த்தி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி கோவிலில், நாளை சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
திண்டிவனம் சாலை, டோல் கேட் அருகில் உள்ள இரும்பையில் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி கோவில் உள்ளது. இக்கோவிலில் சியாமளா நவராத்திரி பூர்த்தி தினத்தையொட்டி, நாளை (18ம் தேதி) காலை 9:00 மணிக்கு கலச பூஜை நடக்கிறது.
அதனை தொடர்ந்து, சிறப்பு ேஹாமம், பூர்ணாஹுதியுடன் அம்பாளுக்கு அபிேஷகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மேல் பாலாதிரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை நடக்கிறது.
அதையடுத்து, டாக்டர் சுகுமாரி மாணவர்களின் வீணை இசைக் கச்சேரி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.