/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
/
புதுச்சேரியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
ADDED : மார் 21, 2026 09:58 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி, கடற்கரை சாலை, காந்தி திடலில் திரண்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.
ரம்ஜான் நோன்பு, கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. ஒரு மாத காலம் நோன்பிருந்து இறைவனை வழிபட்ட இஸ்லாமியர்கள், நேற்று பிறை தெரிந்ததைத் தொடர்ந்து ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடினர்.
நேற்று காலை புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி சிலை எதிரே உள்ள திடலில் சிறப்புத் தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இதேபோல் நகரின் முக்கியப் பகுதிகளான குத்பா பள்ளி வாசல், அகமதியா பள்ளி வாசல், மீரா பள்ளி வாசல், சுல்தானியா பள்ளிவாசல், மஸ்ஜித் அஹமத், சுல்தான்பேட்டை பள்ளிவாசல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களிலும் சிறப்புத் தொழுகை நடந்தது.

