ADDED : மார் 26, 2026 06:22 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி கோ-ஆப்டெக்ஸ் கடையில் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது.
புதுச்சேரி நேருவீதியில் இயங்கி வரும் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' திட்டம் கடந்தபிப்.,1ம் தேதி துவங்கி சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இதில் வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் துணி ரகங்களை வாங்கி செல்கின்றனர். சிறப்பு விற்பனை வரும் 28ம் தேதியுடன முடிவடைகிறது. இதனால் புதுச்சேரி நேரு வீதியில் உள்ள கோ ஆப்டெக்ஸ் கடையில் பொதுமக்கள், வாடிக்கையாளர் அவர்களுக்கு தேவையான துணி வகைகளை வாங்கி சென்றனர்.
