/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தீபாவளி கொண்டாடிய சிறப்பு பள்ளி மாணவர்கள்
/
தீபாவளி கொண்டாடிய சிறப்பு பள்ளி மாணவர்கள்
ADDED : அக் 18, 2025 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தனியார் மற்றும் சிறப்பு பள்ளி மாணவர்கள் நேற்று பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
திங்கள் கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை தினங்களாக உள்ளது. அதையொட்டி, புதுச்சேரியில் உள்ள தனியார் மற்றும் சிறப்பு பள்ளி மாணவர்கள் நேற்றே பள்ளி வளாகங்களில் இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
அதேப்போல் புதுச்சேரி வினோபா நகரில் உள்ள இசை மையம் சிறப்பு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி, தங்கள் பயிற்சியாளருடன் பட்டாசு கொளுத்தி தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடினர்.