/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை
/
கோவில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜை
ADDED : பிப் 15, 2026 05:55 AM
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, இன்று சிவன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இன்று (15ம் தேதி), சிவராத்திரியையொட்டி, பக்தர்கள் கோவில்களில் இரவு முழுதும் கண் விழித்து, சிவ நாமத்தை உச்சரித்தபடியே, சிவனை வழிபடுவர்.
அதன்படி, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோவில், கருவடிக்குப்பம் குரு சித்தானந்த கோவில், வில்லியனுார் திருகாமீஸ்வரர், பாகூர் மூலநாதர், முதலியார்பேட்டை முத்துக்குமார சுவாமி கோவில், லாஸ்பேட்டை சிவப்ரமணிய கோவில், சாரம் சிவ சுப்ரமணியர் கோவில், தவளக்குப்பம் அயிற்றுார் மகா தேவர் சிவன் கோவில், நாணமேடு ஜலகண்டேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில் 4 கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
நிகழ்ச்சியொட்டி, பல்வேறு சிவன் கோவில்களில், பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

