பாக்கமுடையான்பட்டில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம்
பாக்கமுடையான்பட்டில் இன்று சிறப்பு வரி வசூல் முகாம்
ADDED : மார் 08, 2026 03:44 AM
புதுச்சேரி: பாக்கமுடையான்பட்டு, தட்டாஞ்சாவடியில் இன்று சிறப்பு வரி வசூல் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியானது வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி செலுத்துவோருக்காக இன்று 8ம் தேதி பாக்கமுடையான்பட்டு மெயின் ரோட்டில் அமைந்துள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் சிறப்பு வரி வசூல் முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில், பாக்கமுடையான்பட்டு, ராஜாஜி நகர், வினோபா நகர், தட்டாஞ்சாவடி, இதர வார்டுகளில் உள்ளவர்கள் 2025-26ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வீட்டு வரி, சொத்து வரி, சேவைக்கான நிலுவை வரி செலுத்தலாம்.
இதேபோல் இன்று 8ம் தேதி காலை 9:00 முதல் 5:00 மணி வரை தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர், வீட்டு வரி வசூல் மையத்தில் சிறப்பு வசூல் முகாம் நடக்கிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள் வரி நிலுவையை செலுத்தலாம்.
வரி நிலுவைதாரர்கள் 2025-26ம் வரையிலான காலக்கட்டத்திற்கு முழுதுமாக வரியை செலுத்தி வட்டி, ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்கவும். வீட்டு வரி, சொத்துவரி, சேவை வரியை lgtams.py.gov.in என்ற இணைய முகவரியிலும், ஜிபே., போன்-பே, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமும் செலுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
