ADDED : பிப் 15, 2024 04:39 AM
அ நிறம் | அளவு
காரைக்கால : காரைக்காலில் அரசு பொது மருந்துவனைக்கு புதுச்சேரியிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு வருகை தரவுள்ளனர். ,
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு மாதமும் இரண்டு வெள்ளிக் கிழமைகளில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை புரிந்து சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
இதன்படி வரும் 16ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12மணி வரை குழந்தை அறுவை சிகிச்சை, நரம்பியல், சிறுநீரகவியல், இருதயவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் வருகை புரிந்து சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளதால் காரைக்கால் வாழ் பொது மக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டது.
