/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குராஷ் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி
/
குராஷ் தற்காப்பு கலை சிறப்பு பயிற்சி
ADDED : டிச 16, 2024 05:20 AM

புதுச்சேரி : தேசிய போட்டியில் பங்கேற்கும் குராஷ் தற்காப்பு கலை வீரர்களுக்கான சிறப்பு பயிற்சியை விளையாட்டுத்துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் பார்வையிட்டு, சீருடை வழங்கினார்.
பள்ளிகளுக்கு இடையிலான 68வது தேசிய விளையாட்டு போட்டிகள் வரும் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கான தகுதி தேர்வு உப்பளம் மைதானத்தில் நடந்தது. அதில், குராஷ் தற்காப்பு கலை போட்டிக்கு பல்வேறு வயது பிரிவுகளில் ரித்தீஷ், தினேஷ் குமார், ஹரீஷ்குமார், மித்ரன், மதிவாணன், அகத்தியன், தவஸ்ரீ, சுவேதா, லோகேஸ்வரி, ஹரிதா, ரூபாஸ்ரீ, நிதிஷ், தர்ஷன்குமார், விஷால், விஜய் கிருஷ்ணா, திவ்யராஜ், சஞ்சிதா, நிஷாந்தி, பவித்ரா, ஜாஸ்மின்மேரி ஆகிய 20 வீரர், வீராங்கணைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு முத்திரையர்பாளையம் ஆதித்யா பாரதிதாசன் பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சியை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை இணை இயக்குனர் வைத்தியநாதன் நேற்று பார்வையிட்டு, வீரர்களுக்கு சீருடை வழங்கினார்.
பள்ளி முதல்வர் ஆலன்டைடஸ், ஆசிரியர்கள் ராமச்சந்திரன், ஆனந்தராஜ் ஆகியோர் வரவேற்றனர். குராஷ் தற்காப்பு கலை சங்கத்தின் தலைவர் அசோக் ஆனந்தன், பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மூத்த பயிற்சியாளர்கள் இளையநம்பி, விஸ்வநாதன், மகேஷ்வரன், பச்சையப்பன், கோகுல் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். இவர்கள் வரும் 30ம் தேதி தேசிய போட்டியில் பங்கேற்க ராய்ப்பூர் செல்கின்றனர்.

