/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலையில் சிறப்பு பயிலரங்கம் சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்பு
/
புதுச்சேரி பல்கலையில் சிறப்பு பயிலரங்கம் சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்பு
புதுச்சேரி பல்கலையில் சிறப்பு பயிலரங்கம் சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்பு
புதுச்சேரி பல்கலையில் சிறப்பு பயிலரங்கம் சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 06, 2024 06:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலையில், 'போஸ்ட் குவாண்டம் கிரிப்டோகிராபி' சிறப்பு பயிலரங்கில், சர்வதேச வல்லுநர்கள் பங்கேற்று பயிற்சி வழங்கினர்.
புதுச்சேரி பல்கலை கணினி அறிவியல் துறை மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த 'சிம்பா' எனும் அமைப்பு இணைந்து, புதுச்சேரி பல்கலையில், 'போஸ்ட் குவாண்டம் கிரிப்டோகிராபி' என்ற இரு வார பயிலரங்கை நடத்தின.
கடந்த, 1978,ல் பிரான்ஸில் துவங்கப்பட்ட சிம்பா அமைப்பு, வளரும் நாடுகளில் கணிதம் தொடர்பான கல்வியையும் ஆராய்ச்சியையும் வளர்ப்பதை நோக்கமாகக்கொண்டது.
இப்பயிலரங்கை, சுவிட்சர்லாந்தின் நியொஷெத்தல் பல்கலையை சேர்ந்த, பேராசிரியர் எலிசா லாரண்ஸோ கார்சியா, புதுச்சேரி பல்கலை கணினி அறிவியல் துறை பேராசிரியர் சித்ரலேகா மற்றும் இணை பேராசிரியர் சுனிதா ஒருங்கிணைத்தனர். பேராசிரியர் சித்ரலேகா வரவேற்புரை வழங்கினார்.
துவக்க விழாவிற்கு பல்கலைக்கழக கலை மற்றும் பண்பாட்டு இயக்குனர் கிளமெண்ட சகாயராஜா லூர்து தலைமை தாங்கினார். நிறைவு விழாவில் பொறுப்பு துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை உரையாற்றினார். சிம்பா இயக்குனர் கிறிப்டோ, பேராசிரியர் எலிசா லாரண்ஸோ கார்சியா சிறப்புரையாற்றினார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் புலத்தின் புல முதன்மையர் சிவசத்யா மற்றும் கணினித்துறைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களின் முயற்சிகளை வாழ்த்திப் பேசினர்.
கணினித்துறை இணைப்பேராசிரியர் சுனிதா நன்றி கூறினார்.