மொரட்டாண்டியில் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்
மொரட்டாண்டியில் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்
ADDED : பிப் 18, 2026 04:54 AM

புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில், வரும் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம் மற்றும் மகர கும்ப தீபம் ஏற்றப்படுகிறது.
நவகிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனீஸ்வரர், இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை இடம் பெயர்ந்து நீதி பரிபாலனை செய்து வருகிறார். தற்போது கும்ப ராசியில் இருந்து நீதி பரிபாலனை செய்து வரும் சனீஸ்வரர், வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இச்சனிப் பெயர்ச்சி தோஷத்தில் இருந்து உலக மக்களை காத்திட வேண்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டியில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் மகா யாகம் மற்றும் மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது.
இப்பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப் படும். பங்கேற்க விரும்பு வோர் கோவிலில் ரூ.3,000 செலுத்தி தங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரம் வேண்டுவோர் 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
