மொரட்டாண்டியில் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்
மொரட்டாண்டியில் 6ம் தேதி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்
ADDED : பிப் 24, 2026 04:19 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் 6ம் தேதி சனிப் பெயர்ச்சி சிறப்பு யாகம் நடக்கிறது.
நவக்கிரகங்களில் நீதிமானாக போற்றப்படும் சனீஸ்வரர், கும்ப ராசிரியில் இருந்து வரும் மார்ச் 6ம் தேதி காலை 8:26 மணிக்கு மீன ராசிக்கு இடம் பெயர்கிறார்.
இந்த சனிப்பெயர்ச்சி தோஷத்தின் தாக்கத்தை குறைக்க வேண்டி, புதுச்சேரி அடுத்த மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி மகா யாகம் மற்றும் 80 அடி உயர மகர கும்ப தீப தரிசனம் நடக்கிறது. இப்பூஜையில் பங்கேற்க 8 ஆயிரம் பேருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்.
பங்கேற்க விரும்புவோர்கோவிலில் ரூ.3,000 செலுத்திதங்கள் பெயர், நட்சத்திரம், ராசி, கோத்திரத்துடன் பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 93454 51655 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
