/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு பிரத்யேக சிகிச்சை
/
மணக்குள விநாயகர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு பிரத்யேக சிகிச்சை
மணக்குள விநாயகர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு பிரத்யேக சிகிச்சை
மணக்குள விநாயகர் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு பிரத்யேக சிகிச்சை
ADDED : ஏப் 20, 2025 11:08 AM
புதுச்சேரி: எலும்பு புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு, மணக்குள விநாயகர் மருத்துவமனையில் கஸ்டம் மெகா புரோஸ்தேசிஸ் மூலம் பிரத்யேக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கலித்தீர்தாள்குப்பத்தில் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்குசமீபத்தில்,18 வயது இளம் பெண் எலும்பில் ஏற்படக்கூடிய ஒரு வகையான தீவிர புற்று நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்தார்.
அவருக்கு புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் அருள்குமார் மற்றும் முடநீக்கியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு டாக்டர்கள் சத்யநாராயணன், உதயகுமார், வெற்றி ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்று நோய் கட்டியை முற்றிலுமாக அகற்றினர். பின், கஸ்டம் மெகா புரோஸ்தேசிஸ் எனப்படும் பிரத்யேக செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சையின் முக்கிய அம்சம், தீவிரமாக புற்று நோயை முழுமையாக நீக்குவதோடு , நோயாளியின் இயல்பான இயக்க திறனை மீண்டும் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகும்.மருத்துவ குழுவின் கூட்டு முயற்சியும், நோயாளியின் மன உறுதியும், அறுவை சிகிச்சையின் வெற்றிக்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.

