/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நீட் தேர்வு சாதனை மாணவர்களுக்கு ஸ்பெக்ட்ரா அகாடமி பாராட்டு விழா
/
நீட் தேர்வு சாதனை மாணவர்களுக்கு ஸ்பெக்ட்ரா அகாடமி பாராட்டு விழா
நீட் தேர்வு சாதனை மாணவர்களுக்கு ஸ்பெக்ட்ரா அகாடமி பாராட்டு விழா
நீட் தேர்வு சாதனை மாணவர்களுக்கு ஸ்பெக்ட்ரா அகாடமி பாராட்டு விழா
ADDED : ஜன 29, 2024 04:17 AM

புதுச்சேரி : ஸ்பெக்ட்ரா அகாடமி நிறுவனத்தில் நீட் தேர்வில் சாதனை படைத்து மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
புதுச்சேரியில் ஸ்பெக்ட்ரா அகாடமி நிறுவனம் தமிழக மற்றும் புதுச்சேரியில், மருத்துவம், பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறது.
கடந்த 2023ம் ஆண்டில் நீட் தேர்வில் மாணவி அக் ஷயா, 654 மதிப்பெண் பெற்று புதுச்சேரி அளவில் சிறப்பிடம் பெற்றார்.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வின் மூலம் மருத்துவ சேர்க்கையில், 10 பேர் ஜிப்மர் மருத்துவ கல்லுாரியிலும், 223 பேர் அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு, ஸ்பெக்ட்ரா அகாடமி சார்பில், பாராட்டு விழா, புதுச்சேரி சங்கமித்ரா கண்வென்ஷன் சென்டரில் நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், ஸ்பெக்ட்ரா அகாடமி தலைவர் செந்தில்குமார் மாணவர்களை வாழ்த்தி, பாராட்டினார். மேலாண் இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார்.
இந்திராகாந்தி மருத்துவக் கல்லுாரி இயக்குனர் உதயசங்கர், உயர் கல்வி இணை இயக்குநர் சிவகாமி, பேச்சாளர் ஜான்கென்னடி ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு ஊக்கத்தினையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.