ADDED : செப் 03, 2026 08:41 PM
புதுச்சேரி: புதுச்சேரி மூகாம்பிகா இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி, கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சுப் பயிற்சி கிளினிக் சார்பில், கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு 2 நாள் இலவச பேச்சு மற்றும் காது பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி, விவேகானந்தா நகர், வில்லியனுார் மெயின் ரோடு, கியூர் காது கருவிகள் மற்றும் பேச்சுப் பயிற்சி கிளினிக்கில், மூகாம்பிகா இணை மருத்துவ அறிவியல் கல்லுாரி முதல்வர் வேணுகோபால் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
முகாமில், பேச்சு, மொழி மற்றும் கேட்பியல் நிபுணர் முத்துக்குமரன் ஞானசேகரன், பொது மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் நிபுணர் அனுஷா முத்துக்குமரன் ஆகியோர் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கும் முகாமில், காது கேளாமை, காது பரிசோதனை, குரல் மாற்றக்குறைபாடுகள், திக்குவாய் குறைபாடுகள், உச்சரிப்பு் குறைபாடுகள், மன வளர்ச்சிக் குறைபாடு, மூளை மூடக்குவாதம், பக்கவாத நிலை பேச்சுக் குறைபாடு, கற்றல் திறன் குன்றியோர், ஆட்டிசம், கவனக்குறைபாடு, கவனக்குறைவு, உள் அன்னம், உதடு பிளவு, நடத்தைக் கோளாறுகள், பச்சிளம் குழந்தை காது பரிசோதனை உள்ளிட்ட அதிநவீன பரிசோதனைகள் மற்றும் சிறப்பு ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
முகாமில், 1 அட்டை பேட்டரி வாங்கினால் கூடுதலாக 1 அட்டை பேட்டரி வழங்கப்படும். காது கருவிகள் வாங்குவோர் மற்றும் சர்வீஸ் செய்பவர்களுக்கு 15 சதவீதம் சலுகை வழங்கப்படுகிறது.
