ADDED : ஏப் 06, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ரெட்டியார்பாளையம், ஸ்ரீ மூகாம்பிகா பேச்சு கேப்பியல் மறுவாழ்வு கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம், கியூர் காது கருவிகள் பேச்சு பயிற்சி கிளினிக் சார்பில், இலவச பேச்சு மற்றும் காது பரிசோதனை மருத்துவ முகாம் நடந்தது.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடந்த இலவச மருத்துவ முகாமை இயக்குநர் வேணுகோபால், துணை இயக்குனர் கோடீஸ்வரி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.நிறுவனர் முத்துக்குமரன் வரவேற்றார்.
முகாமில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட பலர் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று பயனடைந்தனர். டாக்டர் அனுஷா முத்துக்குமரன் நன்றி கூறினார்.

