sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வேகத்தடைகளால் விபத்து அபாயம்

/

வேகத்தடைகளால் விபத்து அபாயம்

வேகத்தடைகளால் விபத்து அபாயம்

வேகத்தடைகளால் விபத்து அபாயம்


ADDED : ஏப் 02, 2025 03:25 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 03:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்,: கன்னியக்கோவிலில் வேகத்தடைகளின் மீது பூசப்பட்டிருந்த வெள்ளை வண்ணம், நிறம் இழந்து விட்டதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கி வருகின்றனர்.

பாகூர் தொகுதிக்குட்பட்ட கன்னியக்கோவில் - மணப்பட்டு சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இச்சாலை, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுபிக்கப்பட்டது. இந்த சாலையில், விபத்துக்களை தவிர்க்கும் வகையில், முக்கிய இடங்களில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது அடிக்கப்பட்ட வெள்ளை கோடுகள் 2 ஆண்டுகள் கடந்த நிலையில்

கோடுகள் நிறமிழந்துள்ளது. இதனால் வேகத்தடை இருப்பது தெரியவில்லை. இதனால் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, மணப்பட்டு கடற்கரை சுற்றுலா மையத்திற்கு செல்லும் வெளியூர் சுற்றுலா பயணிகள், வேகத்தடைகளால் விபத்துக்குள்ளாகி வருவது தொடர் கதையாக உள்ளது.

எனவே, கன்னியக்கோவில் - மணப்பட்டு சாலையில் உள்ள வேகத்தடைகளின் மீது பிரதிபலிக்கும் வர்ணம் பூசிடவும், எச்சரிக்கை பலகைகள் அமைத்திடவும், பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us