/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை ஆன்மிக பயணம்
/
திருக்காமீஸ்வரர் கோவிலில் நாளை ஆன்மிக பயணம்
ADDED : பிப் 22, 2024 06:45 AM

வில்லியனுார் : வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் மையமாக கொண்ட மூன்றாம் ஆண்டு பவுர்ணமி ஆன்மிக நடைபயணம் நாளை மாலை 6:00 மணிக்கு தொடங்குகிறது.
புதுச்சேரி அடுத்த, வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவிலை சுற்றி பிரசித்திப் பெற்ற ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்கள் ஜீவ சமாதிகள் அமைந்துள்ளன.
திருவண்ணாமலை கிரிவலம் போல, கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் பவுர்ணமி நாளில் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து முதன் முறையாக ஆன்மிக நடைபயணம் துவங்கியது.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டு ஆன்மிக நடைபயணம் நாளை மாலை 6:00 மணிக்கு துவங்குகிறது. இதில், புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள தமிழக பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.
'வில்லியனுாரில் கடந்த இரண்டு ஆண்டாக தொடர்ந்து ஆன்மிக நடைபயணம் செல்கிறேன். சிவனடியார்கள் திருமுறை பதிகங்கள் பாடி, சிவபுராண கதைகள் கூறியபடி செல்வது, மன நிம்மதி கிடைக்கிறது'
- தனசேகரன், தவளக்குப்பம்.
'வரலாற்று சிறப்புமிக்க பழமையான சிவலாயங்கள், அதனை சுற்றியுள்ள சித்தர்களின் ஜீவ சமாதிகளை ஒரு சேர தரிசித்து செல்வது மனதிற்கு நிம்மதி கிடைக்கிறது'
-அருள் ஜோதி, கோட்டை மேடு, வில்லியனுார்.
'வழிநெடுக சிவாலயங்கள், சித்தர் பீடங்களை தரிசித்து செல்வதோடு, சங்கரா ஆரத்தியின்போது பித்ருகளுக்கு வழிபாடு செய்யும் முறையால், முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்க பெறுவது மன நிறைவு கிடைக்கிறது'
-சந்துரு, வி.மருதுார், விழுப்புரம்.
'சிவனடியார்களுடன் பஞ்சாட்சர மந்திரம் முழங்கியவாறு செல்லும்போது, நமக்கு தெய்வ சக்தியும், குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கிறது'
- ஆனந்தன், நடுவீரப்பட்டு, கடலுார்.