/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : மே 14, 2025 11:32 PM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டம் 3 அளவில், நடந்த விளையாட்டு போட்டிக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி கல்வித்துறை மூலம், வட்டம் 3 அளவிலான பள்ளிகளுக்கு இடையேயானா வாலிபால், கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கால்பந்து, கொகோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியில் பாகூர், கரையாம்புத்துார், மடுகரை, நெட்டப்பாக்கம் உள்ளிட்ட 7 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ராஜசேகர் தலைமை தாங்கினார். பள்ளி நுாலகர் கலியமூர்த்தி வரவேற்றார். தலைமையாசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி கல்வித்துறை விளையாட்டுத்துறை துணை இயக்குனர் வைத்தியநாதன், துணை முதல்வர் தில்லை காமராஜர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு, வட்டம் அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் குருநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில். ஆசிரியர்கள் பிரகாஷ், பாலமுருகன், புஷ்பராஜ், பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.