தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

 விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா


ADDED : மார் 02, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு, திருபுவனை தொகுதியில் மகளிருக்கான விளையாட்டு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நடந்தது.

விளையாட்டு போட்டியில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசளிப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு, என்.ஆர்.காங்., மாநில பொது செயலாளர் ஜெயபால், மகளிர் அணி தலைவி ரேவதி பற்குணன், இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பளராக முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகளிர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

மாநில துணை தலைவி புவனேஸ்வரி, தொகுதி தலைவர் இருதயமேரி, கலை இலக்கிய துணை தலைவி சுமதி, செயலாளர் ரேவதி, தொகுதி செயலாளர் தேவி மற்றும் தேன்மொழி விஜயலட்சுமி, சவுந்தர்யா, சத்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us