கால்நடை மருத்துவக் கல்லுாரியில் விளையாட்டு போட்டி நிறைவு
கால்நடை மருத்துவக் கல்லுாரியில் விளையாட்டு போட்டி நிறைவு
ADDED : ஜூன் 15, 2026 02:31 AM

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லுாரியில் விளையாட்டு போட்டிகள் நிறைவு விழா நடந்தது.
கல்லுாரியின் பொது செயலாளர் தமிழ் ஆனந்தன் வரவேற்றார். எஸ்.பி., வம்சிதர ரெட்டி, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். கல்லுாரியின் புலமுதல்வர் முருகவேல் முன்னிலை வகித்தார். விளையாட்டுத்துறை இயக்குனர் முகமது அசிம் தொகுத்து வழங்கினார். போட்டிகளில் இந்த ஆண்டிற்கான சாம்பியன்ஷிப் கோப்பையை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பெற்றனர்.
தடகள போட்டிக்கான கோப்பையை இரண்டாம் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். விளையாட்டு செயலாளர் நவீன் குமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
