/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி
/
மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி
ADDED : நவ 24, 2024 04:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டிகளை அமைச்சர் தேனீ ஜெயகுமார் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சமூக நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது.
போட்டிகளை அமைச்சர் தேனீ ஜெயகுமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில், சமூக நலத்துறை இயக்குனர் ராகினி, துணை இயக்குநர் ஆறுமுகம், கண்காணிப்பாளர் திருமுருகன், தி.மு.க., கிளை செயலாளர் ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.