/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
/
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
ADDED : பிப் 20, 2025 06:31 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் பானுமதி, மூத்த கணித ஆசிரியர் இந்திரா ஆகியோர் தலைமை தாங்கி, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கவிதா, குபேரன் ஆகியோர் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினர்.
ஓட்டப்பந்தயம், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உடற் கல்வி ஆசிரியர் பிரகாஷ் செய்திருந்தார்.