ADDED : பிப் 02, 2025 04:35 AM

புதுச்சேரி : காமராஜ் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கினார்.
வாணரப்பேட்டை, தாவிதுபேட்டை காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு தினத்தை யொட்டி, ஓட்டப்பந்தயம், வாத்து நடை, சாக்கு அணிந்து ஓடுதல், லெமன் அண்ட் ஸ்பூன், பலுான் ஊதி வெடித்தல், இசை நாற்காலி, நீர் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டினார். பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்றார். ஆசிரியை மனோரஞ்சிதம் நன்றி கூறினார்.
தி.மு.க., மாநில நிர்வாகிகள் தங்கவேல், கணேசன், விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் சந்துரு, காளப்பன், ராகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.