நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் சேத்திலால் அரசு உயர்நிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டி நடந்தது.
பள்ளி விளையாட்டுத் திடலில் நடந்த விழாவில், ஆசிரியர் ராஜலட்சுமி வரவேற்றார். தலைமை ஆசிரியை சுஜாதா தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் இளவரசு நோக்கவுரை நிகழ்த்தினார். ஆசிரியர்கள், வளர்மதி, செல்வராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனை தொடர்ந்து, மாணவர்களின், கபடி , கோ - கோ, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.

