நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பள்ளியில் நடந்த விழாவில், ஆசிரியர் ஆனந்தன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சகாயமேரி பாத்திமா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். விழாவில், பள்ளி கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம் நேரு உட்பட ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் அமுதா நன்றி கூறினார்.

