ADDED : ஏப் 09, 2025 03:49 AM

அ நிறம் | அளவு
கடலுார் : கடலுார் அடுத்த முள்ளோடை ஹயகிரீவர் பப்ளிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது.
விழாவிற்கு ஹயகிரீவர் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குநர் சித்ரா ராஜேஸ்வரி ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார். பள்ளி முதல்வர் லெரு அலெக்சாண்டர் சேவியர் வாழ்த்துரை வழங்கினார். டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி முதல்வர் சுகந்தி ஒனோரின் தேசிய கொடி ஏற்றினார்.
விழாவையொட்டி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம், கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
