/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் விளையாட்டு தின விழா
/
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் விளையாட்டு தின விழா
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் விளையாட்டு தின விழா
முத்துரத்தின அரங்கம் பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : பிப் 01, 2026 05:32 AM

புதுச்சேரி: கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றார். தலைமை விருந்தினராக உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய கராத்தே சங்கத்தின் தலைவர் வளவன் கலந்து கொண்டு விளையாட்டின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மருத்துவர் ரத்தினவேல் காமராஜன் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார். மாணவர்கள் வண்ணக் கொடி ஏந்தி அணி வகுப்பு, மாணவிகளின் நடனம், யோகா, கராத்தே, சிலம்பம், ஜிம்னாஸ்டிக் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பாளர் ஜஸ்டின், உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

