/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எஸ்.எம்.வி., பள்ளியில் விளையாட்டு தின விழா
/
எஸ்.எம்.வி., பள்ளியில் விளையாட்டு தின விழா
ADDED : ஆக 06, 2025 11:30 PM

புதுச்சேரி:மதகடிப்பட்டு எஸ்.எம்.வி., பள்ளியில் முதலாம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது.
தட்சசீலா பல்கலைக்கழக வேந்தர் தனசேகரன் தலைமை தாங்கினார். பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார். மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் நிலா பிரியதர்ஷினி, கீதா, கவிதா, வைஷ்ணவி, சூர்யகுமார், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினர்.
முன்னதாக, மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. பின், சிறுவர்களுக்கான தடை தாண்டி ஓடுதல், வளையத்தில் நுழைந்து முன்னேறுதல், 6 வயது முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, விரைவு ஓட்டம், குறுந்துார ஓட்டம், நீண்டதுார ஓட்டம், தொடர் ஓட்டம், தடை ஓட்டம் மற்றும் தடகள போட்டிகள் நடைபெற்றது.
இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்த சோலிஸ் அணிக்கு பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது.